எலிமினேட்-ஆன ஷிவானி...டாப் குக்கு டூப் குக்கு 2-வின் 4 ஃபைனலிஸ் இவர்கள் தான்..
டாப் குக்கு டூப் குக்கு 2
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் டாப் குக்கு டூப் குக்கு. தற்போது சீசன் 2 நிகழ்ச்சி சிறப்பாக ஒளிப்பரப்பாகி மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

மறைந்த நடிகர் ரோபோ ஷங்கர், கிரண், பிரியங்கா, TSR உள்ளிட்டவர்கள் எலிமினினேஷனான நிலையில், கடந்த வாரம் ஷிவானி எலிமினேட் ஆனார்.
இந்நிலையில், அடுத்த வாரம் இறுதி போட்டி நடக்கவுள்ளது. அந்தவகையில், இறுதி சுற்று போட்டிக்காக தேர்வாகும் போட்டிகள் நடந்து வருகிறது.

அப்படி, டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2வின் முதல் இறுதி சுற்று போட்டியாளராக பெசன்ட் ரவி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த வாரம் நடந்த போட்டியில் சிறப்பாக சமைத்த டெல்னா டவிஸ் 2வது இறுதி சுற்று போட்டியாளராக தேவு செய்யப்பட்டார்.
இதனைதொடர்ந்து, இறுதி சுற்று போட்டியில் செல்லப்போகும் அடுத்த 2 போட்டியாளர்கள் யார் என்ற தேர்வு இந்த வாரம் நடந்துள்ளது.
4 ஃபைனலிஸ்
அப்படி இந்த வார எபிசோட்டில் சிறப்பாக சமைத்த 2 போட்டியாளர்களை நடுவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதில் 3வது இறுதி சுற்று போட்டியாளராக ப்ரீத்தாவும் 4வது இறுதி சுற்று போட்டியாளராக வாஹீசன் ராசைய்யாவும் தேர்வாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.