40 வயதில் இப்படியா? குழந்தை இருக்கும் போதே கிளாமர் மிரட்டும் விஜய் பட நடிகை..
வட இந்திய நடிகையாக தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கதாநாயகனின் தோழி கதாபாத்திரத்தில் நடித்து அதன்பின் மழை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரேயா சரண்.
இப்படத்தினை தொடர்ந்து தனுஷின் திருவிளையாடல், ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ், விஜய்யின் அழகிய தமிழ் மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ரெளத்திரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இதன்பின் தமிழில் மிகப்பெரிய வாய்ப்புகள் இல்லாமல் பாலிவுட், தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார். பின் வெளிநாட்டு நபரை திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை வளர்ந்தப்பின்னும் நடிப்பில் கவனம் செலுத்தி ஆர் ஆர் ஆர், தட்கா, திரிஷ்யம் 2 இந்தி, கப்சா உள்ளிட்ட படங்கலில் நடித்து வந்தார்.
40 வயதாகும் ஸ்ரேயா சரண், இன்னும் கிளாமரில் உச்சக்கட்ட தாராளத்தை காட்டி போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த விருதுவிழாவிற்கு ரசிகர்கள் கண்டு மிரளும் அளவிற்கு கிளாமர் ஆடையணிந்து வந்துள்ளார். அதன் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் இருக்கிறார் ஸ்ரேயா சரண்.