42 வயதிலும் குறையாத அழகில் நடிகை சதா!! ரீல்ஸ் வீடியோ இதோ..
நடிகை சதா
தெலுங்கு சினிமாவில் 2002ல் வெளியான ஜெயம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சதா, அதன் தமிழ் ரீமேக்கிலும் நடிகர் ரவி மோகனுடன் நடித்தார்.

இப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்தடுத்து நடித்து வந்தார் சதா.
இதனையடுத்து படவாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க கடைசியாக தமிழில் டார்ச்லைட் படத்தில் நடித்திருந்தார். 12 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2025ல் அவர் நடிப்பில் உருவான மதகஜராஜா படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தது.

ரீல்ஸ் வீடியோ
இதற்கிடையில், விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட சதா, காடுகளுக்கு சென்று புகைப்படக் கலைஞராகவும் இருந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வரும் சதா, 42 வயதிலும் குறையாத அழகில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.