43 வது பிறந்தநாள்!! இலங்கை கடற்கரையில் குடும்பத்துடன் நடிகை ஸ்ரேயா சரண்..
ஸ்ரேயா சரண்
தமிழ் சினிமாவில் இடுப்புக்கு பெயர் நடிகை என்றால் அது சிம்ரன் தான். இப்போதும் அவரை இடுப்பழகி சிம்ரன் என்று தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
அவருக்கு அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகி ஸ்ரேயா, மிகவும் ஒல்லியாக அதே நேரம் தனது அழகால் ரசிகர்களை கவர்ந்த ஒரு நாயகியாக வலம் வந்தார்.
நடிக்க ஆரம்பித்த வேகத்தில் படங்கள் நடித்து வந்தவர் திருமணம், குழந்தை பெற்றப்பின் அவ்வளவாக படங்கள் பக்கம் காணவில்லை. தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ஸ்ரேயா, MIRAI என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் நாளை 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இன்று செப்டம்பர் 11 ஆம் தேதியோடு 43 வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் ஸ்ரேயா.
தன்னுடைய குடும்பத்துடன் இலங்கை கடற்கரையில் ஜாலியாக ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா சரண்.