44 வயதான நடிகை சமீரா ரெட்டியா இது!! முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே..
சினிமாவை பொறுத்தரை ஆரம்பத்தில் அழகாக காணப்பட்டு அறிமுகமாகும் நடிகைகள் திருமணத்திற்கு பின் அழகு போவதால் வாய்ப்பினை இழந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள்.
அப்படி Maine Dil Tujhko Diya என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சமீரா ரெட்டி. சிறு வயதில் உடல் எடையோடு இருந்தவர் போகப்போக அழகு கூடி உடல் எடையை முற்றிலும் குறைத்து அழகிய பெண்ணாக மாறினார்.
அதன்பின் 2002ல் நடிகையாக காலெடி எடுத்து வந்த சமீரா ரெட்டி அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைத்து இளசுகளையும் தன் பக்கம் ஈர்த்தார்.
அப்படத்தினை தொடர்ந்து அஜித்தின் அசல், மாதவனின் வேட்டை, விஷாலின் வெடி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, 2013ல் கடைசியாக ஒரு படத்தில் நடித்தப்பின் 2014ல் அக்ஷை வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து இரு குழந்தைகலை பெற்றெடுத்தார்.
GWKSYU
44 வயதாகும் சமீரா ரெட்டி இணையத்தில் ஆக்டிவாக இருந்து அவரது அம்மா, குழந்தைகளுடன் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருகிறார். தற்போது முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சமீரா ரெட்டியை பார்த்து பலர் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.