450 கோடி சொத்துக்கள் எனக்கு வேண்டாம்!! மறைந்த நடிகரின் மகள் கேட்டது இது மட்டும்தானாம்..
நடிகர் தர்மேந்திரா
பாலிவுட் சினிமாவில் ஹீ-மேன் மற்றும் தரம் பாஜி என்று அழைக்கப்பட்டு வந்த சூப்பர் ஸ்டார் நடிகர் தர்மேந்திரா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.
300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தர்மேந்திரா 19 வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்து சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா தியோல், அஜிதா தியோ என்ற 4 குழந்தைகளை பெற்று வளர்ந்து திருமணத்தையும் செய்து முடித்தார்.

அதன்பின் சக நடிகை ஹேமமாலினியை காதலித்து திருமணம் செய்தார். கணவர் விவாகரத்து கேட்டும் முதல் மனைவி பிரகாஷ் கவுர் விவாகரத்து கொடுக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் 2வது திருமணத்திற்கு சட்டமும் அனுமதி கொடுக்கவில்லை என்பதால் தர்மேந்திரா இஸ்லாம் மதத்திற்கு மாறி ஹேம மாலினியை திருமணம் செய்து ஈஷா தியோல், அஹானா தியோல் என்ற 2 மகள்களை பெற்றார்.
மகள் அஹானா
இந்நிலையில், நடிகையாக இருக்கும் தர்மேந்திரா - ஹேம மாலினியின் மகள் அஹானா ரூ. 450 கோடி சொத்தில் இன்றை மட்டுமே பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதாவது, எனக்கு என் அப்பாவின் முதல் ஃபியட் கார் வேண்டும். அது அழகாகவும் பழமையாகவும் இருக்கும். என் தந்தைக்கு இந்த காரில் எண்ணற்ற நினைவுகள் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் அதை சொந்தமாக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அஹானா தியோல் தெரிவித்துள்ளார்.