48 வயசு நடிகருக்கு கீர்த்தி சுரேஷ் மீது குபீர் ஆசை..தூது போன இயக்குநர்!! பயில்வான்
கீர்த்தி சுரேஷ்
மலையாள நடிகை மேனகாவின் மகளாக இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் கீர்த்தி சுரேஷ். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து மகாநடி படத்திற்காக தேசிய விருதையும் வாங்கி அசத்தினார். அதன்பின் பல கோடி சம்பளத்தில் நடித்து வந்த கீர்த்தி பாலிவுட் சினிமா வரை சென்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ஆண்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பற்றி பலர் விமர்சித்து பேசி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோடி 2 படத்தில் நடித்த போது அப்படத்தின் ஹீரோ விஷாலின் பெற்றோருக்கு கீர்த்தியை ரொம்ப பிடித்துப்போய்விட்டது. அதேபோல் விஷாலும் கீர்த்தி சுரேஷை விருப்பியிருக்கிறார்.
தூது போன இயக்குநர்
இதனைதொடர்ந்து விஷாலின் தந்தையும் தாயும், கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கு சென்று விஷாலுக்கு பெண் கேளுங்கள் என்று லிங்குசாமியை அனுப்பியுள்ளனர். உடனே லிங்குசாமி கீர்த்தி சுரேஷின் அம்மாவிடம் கேட்டுள்ளார். ஆனால் சில காரணங்களை சொல்லி விஷாலுக்கு திருமணம் செய்ய கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மறுத்துள்ளனர்.
அதேப்போல் கீர்த்தி சுரேஷ் இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தீங்க? நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். இந்த தகவலை லிங்குசாமியே பேட்டியில் தெரிவித்துள்ளராம்.