ரவி மோகன் நடத்திய மறைமுக தாக்குதல்!! குஷ்பூ கொடுத்த ரியாக்ஷன் இதுதான்..
ரவி மோகன், ஆர்த்தி
நடிகர் ரவி மோகன், ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து இரு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டார். அதன்பின் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்ததை அடுத்து, கெனிஷா உருக்கமான வீடியோவை பகிர்ந்து சென்னையை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ரவி மோகன் செய்தியாளர்களை திடீரென சந்தித்து, தன்னுடைய மனதில் இருந்ததை அப்படியே உருக்கமாக பேசினார்.

அப்போது, முக்கியமாக ஒரு நடிகையின் பெயரை கூறாமல், இட்லி நடிகை என்று கூறி, அவரால் தான் என் வாழ்க்கை நாசமாகிவிட்டது. ஏற்கனவே 4 சீனியர் நடிகர்கள் என்னிடம் வந்து, அந்த நடிகையால் எங்கள் வாழ்க்கையும் நாசமாக பார்த்தது என்று சொன்னார்கள் என்று ரவி மோகன் தெரிவித்தார்.
ரவி மோகன் அந்த நடிகையின் பெயரை சொல்லாவிட்டாலும் அவர் குறிப்பிட்டது நடிகை குஷ்பூவைத்தான் என்று பலரும் சொன்னார்கள். ஆரம்பத்தில் ரவி மோகன் - ஆர்த்தி திருமணம் நடக்க குஷ்பூ தான் காரணமாக இருந்தார் என்ற பேச்சும் இருக்கிறது.

குஷ்பூ கொடுத்த ரியாக்ஷன்
ரவி மோகன் அப்படி சொன்ன சில மணிநேரத்தில் குஷ்பூ, சிலர் தங்களது டி என் ஏவை நிரூபிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள், நான் சொன்னதெல்லாம் சரிதான் என்று உணர்த்தியதற்கு நன்றி என்று மறைமுகமாக ரவியை தாக்கி பேசியிருந்தார்.
இப்படியான சூழலில் டபுள் ஆக்குபென்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியிருகிறார் குஷ்பூ. அப்போது அவரிடம், ரவி மோகன் விவகாரம் பற்றி கேள்வி எழுந்தது. அதற்கு உடனடியாக ரியாண்ட் செய்தவர், ப்ளீஸ் வேறு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று சாதாரணமாகவும் கடுப்பாகவும் ரியாக்ஷன் கொடுத்து சென்றார்.