சூப்பர் ஸ்டார் நடிகருடன் ஒரே படம்!! ரூ. 45,000 கோடிக்கு அதிபதியான நடிகை...
காயத்ரி ஜோஷி
மாடலாக தன்னுடைய கரியரை தொடங்கி 2000ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றவர் தான் காயத்ரி ஜோஷி. இதன்மூலம் சினிமாவுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 2004ல் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஸ்வேட்ஸ் படத்தில் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி.

முதல் படமே சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படமாக அவருக்கு அமைந்தது. நடிப்பிலும் கவனம் ஈர்த்த காயத்ரி ஜோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய ட்விஸ்ட்டை முதல் படத்திற்கு பின் கொடுத்தார். 2004ல் வெளியான முதல் படத்திற்கு பின் காயத்ரி எந்த படத்திலும் நடிக்கவில்லை.
திருமணம்
சினிமாவில் இருந்து விலகி தொழிலதிபர் விகாஸ் ஒபராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். விகாஸ் ஒபராய் ஒரு தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ஒபராய் ரியால்டியை நடத்தி வருகிறார்.

விகாஸ், காயத்ரி தம்பதிக்கு விஹான், யுவா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தியும் தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்துக் கொண்டார்.

ஒபராய் ரியால்டியின் நிறுவனரான, விகாஸ் ஒபராய், மும்பையில் வெஸ்டின் ஹோட்டல் உள்ளிட்ட பல புகழ்பெற்ற சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கிறார். விகாஸ் ஒபராய் மற்றும் காயத்ரி ஜோஷி இருவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 45 ஆயிரம் கோடி இருக்கும் என்றும் இந்தியாவின் பெரும் பணக்கார தம்பதிகளாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.