11 வயது குறைவான நடிகருடன் ரிலேஷன்ஷிப்!! வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறபோகும் பிரபல நடிகை
பாலிவுட் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் குத்தாட்ட நடிகையாகவும் திகழ்ந்து புகழ்பெற்றவர் நடிகை மலைக்கா அரோரா. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான உயிரே படத்தில் Chaiyya Chaiyya என்ற பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு கவர்ந்தார் மலைக்கா.
அதனை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் குத்தாட்டம் போட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் திகழ்ந்து பிரபலமானார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூருடன் காதலில் இருந்து வருகிறார்.
இருவருக்கும் சுமார் 11 வயது வித்தியாசம் இருப்பதை பலர் கேலி செய்து வந்ததையும் கண்டுக்கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் விமர்சகர் உமைர் சந்து, மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் வாடகைத்தாய் மூலம் முதல் குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளார்கள் என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பிரபலங்களின் அந்தரங்க விசயத்தை வெளிச்சம் போட்டு காட்டும் உமைர் சந்தை பலர் கடுமையாக தாக்கி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
