அந்த தொழிலை தூக்கி எறிந்து சினிமா பக்கம் வந்த 6 பேர்!! மோகத்தின் உச்சிக்கே சென்ற சங்கர் மகள்..
சினிமா ஆசை சிறுவயதிலேயே தோன்றி எப்படியாவது இண்டர்ஸ்டியில் நுழைந்துவிட வேண்டும் என்று பலர் போராடுவார்கள். அப்படி கமல், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, விஜய், மீனா, சிம்பு, ஷாலினி உள்ளிட்ட பலர் சிறுவயதிலேயே நடிக்க ஆரம்பித்து டாப் இடத்தினை பிடித்தார்கள். ஆனால், ரஜினி, அஜித் உள்ளிட்ட ஒருசிலருக்கு தான் அதிர்ஷ்டவசமாக சினிமா வாய்ப்பு கிடைத்து டாப் இடத்தினை பிடிக்க முடிந்தது. அப்படி சினிமா மீது ஆசையில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து விட்டு மருத்துவத்தையே ஒருசில பேர் விட்டு விட்டு சினிமா பிரபலமாகிவிட்டனர். அப்படி யார் யார் டாக்டர் படிப்பை அப்படி விட்டு விட்டனர் என்று பார்ப்போம்.

தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தினை பிடித்து நடிகை சாய் பல்லவி மருத்துவ படிப்பை முடித்துவிட்டு முதலில் நடன கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் நுழைந்தார். சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் மிகப்பெரிய இடத்தினை பிடித்திருக்கிறார்.
பிரம்மாண்ட இயக்குனரின் இரண்டாம் மகள் அதிதி சங்கர் மருத்துவ படிப்பை முடித்து பட்டத்தை பெற்ற அடுத்த சில ஆண்டில் மருத்துவத்தை விட்டு விருமன் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அஞ்சாதே, கோ போன்ற படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் உக்ரேனுக்கு சென்று மருத்துவப்படிப்பை முடித்தும் சினிமாவில் நுழைந்து நடிகராகவிட்டார்.
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை மனுசி சில்லர் மருத்துவ படிப்பை முடித்திருந்த போது மாடலிங் துறையில் மோகம் ஏற்பட்டு 2017ல் உலக அழகியாகி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஸ்ரீலீலா 2021ல் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நுழைந்து தற்போது தெலுங்கு சினிமாவில் டாப் இளம் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள பரத் ரெட்டி மருத்துவ படிப்பை முடித்து இருதய நிபுணராக சில காலம் பணியாறி நடிப்பில் ஆசை வந்ததும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.