இருளர் சமூதாய பெண்ணிடம் தொலைப்பேசி எண் கொடுத்த ஆட்சியர்! ச்சா.. இதே மாதிரி எல்லா அதிகாரிகளும் இருந்துட்டா..

vizhupuram
By Edward Nov 08, 2021 10:20 AM GMT
Report

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் மோகன். அப்போது அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 67 பழங்குடியின இருளர் மற்றும் நரிக்குறவர்களுக்கு பட்டா, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு போன்றவற்றை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அவர் அங்கிருந்த இருளர் பெண்களிடம் தன்னுடைய தொலைபேசி எண்ணை வழங்கி உதவியோ புகாரோ தெரிவிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.