தலைக்கனம்..கர்வம் எல்லாம் சிம்புவுக்கு..பெப்ஸி உமா சொன்ன ரகசியம்..

Silambarasan Actors Tamil Actors
By Jai Jul 03, 2026 11:45 AM GMT
Report

பெப்ஸி உமா

சின்னத்திரை தொலைக்காட்சி உலகில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாக திகழ்ந்தவர் தான் பெப்ஸி உமா. பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான உமாவிற்கு பட வாய்ப்புகள் வந்தும் மறுத்துவிட்டதாக பேட்டியொன்றில் சமீபத்தில் தெரிவித்தார்.

தனித்துவமான குரலாலும் அழகாலும் அத்தனை பேரையும் கட்டிப்போட்ட பெப்ஸி உமாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உமா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பதை பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்.

தலைக்கனம்..கர்வம் எல்லாம் சிம்புவுக்கு..பெப்ஸி உமா சொன்ன ரகசியம்.. | Simbu Is One Of The Most Humble Stars Pepsi Uma

சிம்புவுக்கு

இந்நிலையில் பெப்ஸி உமா அளித்த பேட்டியொன்றில் சிம்பு எப்படிப்பட்டவர் என்ற கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், சினிமாவில் நான் பார்த்தவர்களில் சில பேருக்கும் மட்டும்தான் தலைக்கனம் இருக்காது.

அந்த பட்டியலில் சிம்புவும் ஒருவர். இவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தும் ரொம்பவும் அடக்கமாக இருப்பார். கர்வம் தலையில் ஏறாத மனிதர், எனக்கு ரொம்ப அவரை பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.