ஐஸ்வர்யா லட்சுமியிடம் ரசிகர் சொன்ன அந்த வார்த்தை!! ட்ரெண்ட்டாகும் வீடியோ..
கட்டா குஸ்தி 2
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஜூன் 3 ஆம் தேதி இன்று வெளியான படம் தான் கட்டா குஸ்தி 2.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் கட்டா குஸ்தி 2 படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்ட்.

படத்தை தாண்டி, ப்ரீமியர் ஷோவுக்கு வந்த ஐஸ்வர்யா லட்சுமியிடம் ரசிகர் ஒருவர் சொன்ன ஒரு பாராட்டு ஐஸ்வர்யா கொடுத்த ரியாக்ஷன் தான் தற்போது டிரெண்ட். சிவப்புநிற சேலையில் காரில் இருந்து இறங்கி வந்த அவரை பார்த்த ரசிகர்கள், ஆரவாரமாக வரவேற்றனர்.
ஐஸ்வர்யா லட்சுமி
கூட்டத்தில் இருந்த ஒருவர், மேடம், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, இந்த சிவப்பு புடவை உங்களுக்கு செம்மையாக இருக்கு, நயன் தாரவைவிட நீங்க கலக்குறீங்க என்று சத்தமாக கத்தியிருக்கிறார்.
அந்த ஒரு வார்த்தையை கேட்டு ஐஸ்வர்யா லட்சுமி சிரிப்பை அடக்க முடியாமல் வெட்கத்தில் முகத்தை கையால் மூடிக்கொண்டார் பின் புன்னகையுடன் அங்கிருந்து சென்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Rose Red vida ongaluku Red nalla iruku 🤣#AishwaryaLekshmi 🌹💖reaction ulti🤭#GattaKusthi2 pic.twitter.com/hfyPeqLi32
— Balaji (@RDBalaji) July 3, 2026