8 நாளில் 1000 கோடிக்கு ஆப்பு!! 500 கோடி வசூல் வேட்டைக்கே போராடும் லியோ...
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. படம் வெளியாகிய முதல் நாலே 140 கோடியை ஈட்டியது.
இதன்மூலம் லியோ 1000 கோடியை தட்டித்தூக்கும் என்று சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கூறி வந்தனர். தற்போது வரை லியோ படம் 450 கோடி வசூலை பெற்றுள்ளது.
8 நாட்கள் நிறைவடைவில் உலகளவில் 470 கோடியும் தமிழ்நாட்டில் 163 கோடி வசூலும் பெற்றிருக்கிறது. இது தமிழகத்தில் மட்டும் குறைவான வசூல் என்று கூறி வருகிறார்கள்.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள், லியோ படம் முதல் 3 நாட்களுக்கு பின் கூட்டம் வருவது குறைந்துள்ளதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.
தொடர் விடுமுறை இருந்தும் லியோ படத்தை பார்க்க கூட்டல் இல்லாமல் தியேட்டர் வெறுச்சோடி தான் காணப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் 1000 கோடி வசூலுக்கு ஆப்பு என்றும் 500 கோடியை தாண்டவே இப்படி தட்டுத்தடுமாறி வருவதையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.