பாதியிலேயே இறந்து ஏமாற்றத்தை கொடுத்துட்டாரு!! சந்தானம் மறைவு குறித்து கண்ணீர் விட்ட முருகதாஸ்..
தமிழ் சினிமாவில் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். சில ஆண்டுகளுக்கு முன் தர்பார் படத்திற்கு பின் இயக்கும் வாய்ப்பில்லாமல் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் அவரது உதவி இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் ஆக்ஸ்ட் 16 1947 படத்தினை ஏ ஆர் முருகதாஸ் தயாரித்திருக்கிறார். அப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய முருகதாஸ், எல்லா டெக்னிசினஸும் வேலை செய்திருக்கிறார்கள். எல்லாத்தையும் விட மிகப்பெரிய வலியை கொடுத்துட்டு போய்ட்டார் டி சந்தானம். ஆர்ட் டைரக்டராக தர்பார் படத்தில் வேலை செய்தார்.
என்னிடம் எல்லா விருதுக்கும் இந்த படத்தை அனுப்பனும்-னு என்னிடம் சந்தானம் கூறினார். ஆனால் அவர் கடந்த ஆண்டு மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பத்திற்காகவும் குழந்தைக்காகவும் அவர் உயிரோடு இருந்திருக்கலாம் என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார் முருகதாஸ்.
