பத்து பைசா பிரயோஜனம் இன்றி காணாமல் போன பிக்பாஸ் டைட்டில் வின்னர்ஸ்!! இதுக்கு வரமாலே இருந்திருக்கலாம்..

Aari Bigg Boss
By Edward Apr 06, 2023 10:16 AM GMT
Report

பிரபல ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆண்டு முடிந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் கைப்பற்றியிருந்தார். ஆனால் டைட்டில் வின் பண்ணினாலும் சினிமாவில் வாய்ப்பு கிடக்காமல் இருந்து வருகிறார். இவரை போன்றே டைட்டில் வின் செய்திருந்தால் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.

பத்து பைசா பிரயோஜனம் இன்றி காணாமல் போன பிக்பாஸ் டைட்டில் வின்னர்ஸ்!! இதுக்கு வரமாலே இருந்திருக்கலாம்.. | A Title Winner Is Also A Useless Six Biggboss

ரித்விகா

பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ரித்விகா, இந்நிகழ்ச்சி முன் ஒருசில படங்களில் நடித்து வந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

ஆரவ் நபீஸ்

இரண்டாம் சீசனில் ஆரவ் நபீஸ் டைட்டிலை கைப்பற்றி ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் போதிய வரவேற்பு பெறாமல் இருந்து வருகிறார்.

முகன் ராவ்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து தன்னுடைய பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்த முகன் ராவ் 3வது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகினார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்தும் அவரால் பெரிய வரவேற்பை பெறமுடியவில்லை. தற்போது ஆல்பம் பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

ஆரி அர்ஜுனன்

மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து சீசன் 4ன் டைட்டில் வின்னராகியவர் ஆரி அர்ஜுனன். மக்கள் மனதை ஈர்த்து வந்தாலும் அவருக்கு ஏற்ற படவாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனார்.

ராஜு ஜெயமோகன்

சீரியல் நடிகராகவும் விஜேவாகவும் பணியாற்றிய ராஜு ஜெயமோகன் 5வது சீசனில் கலந்து கொண்டு கோப்பையை கைப்பற்றினார். அதன்பின் அதே தொலைக்காட்சியில் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை கொடுத்து வரவேற்பு பெறாமல் போனது. இதன்பின் அவர் பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். பேசாமல் சீரியல் நடிகராகவே இருந்திருக்கலாம் என்றும் விமர்சிக்கப்பட்டார்.

அசீம்

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னரான அசீம் சீரியல் நடிகராக இருந்து வந்தபோது கொஞ்சம் நல்ல பெயரை பெற்று வந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு பின் சில சர்சசைகளில் சிக்கி பெயரை கெடுத்துகொண்டதோடு படவாய்ப்பினை பெறாமல் பத்துபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் மாறிவிட்டார்.