நிக்கி கல்ராணியுடன் விவாகரத்தா!! வதந்தியால் நொந்துப்போன நடிகர் ஆதி..
ஆதி - நிக்கி
தமிழில் மிருகம், ஈரம், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆதி. ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் சப்தம் என்ற படத்தில் நடித்துள்ளா ஆதி. இப்படம் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
நடிகை நிக்கி கல்ராணியுடன் ஒருசில படங்களில் ஜோடியாக நடித்த ஆதி, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு ஆண்டுகளாகிய நிலையில், இருவரும் விவாகரத்து பெறவுள்ளனர் என்ற செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தெலுங்கு ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் வதந்திகலுக்கு ஆதி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
விவாகரத்தா
அதில், நிக்கியுடனான என் திருமண வாழ்க்கை இனிமையாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் ஆதாரமில்லாமல் விவாகரத்து வதந்திகளை சில யூடியூப் சேனல்கள் பரப்புவது வலியை தனக்கு தருகிறது. காதலிப்பதற்கு முன்பும், திருமணமாகி கணவன் - மனைவியான பின்பும் நானும் நிக்கியும் நல்ல நண்பர்கள்.
எங்கள் இதயத்தால் நாங்கள் ஒன்றுப்பட்டுள்ளோம். இப்படியான வதந்திகள் பரவும்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதலில் இது எனக்கு வருத்தமாக இருந்தது, போகப்போக வருமானத்திற்காக சில யூடியூப் சேனல்கள் இப்படி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவற்றை கண்டு கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் ஆதி.
தற்போது மரகத நாணயம் 2 படத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவலை ஆதி - நிக்கி கல்ராணி அறிவித்துள்ளனர்.