$ 108 பில்லியன் சொத்து மதிப்பு!! முகேஷ் அம்பானி வாரிசுகளின் யார் பணக்காரர் தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani Isha Ambani Akash Ambani
By Edward Jun 17, 2025 05:30 AM GMT
Report

இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.

$ 108 பில்லியன் சொத்து மதிப்பு!! முகேஷ் அம்பானி வாரிசுகளின் யார் பணக்காரர் தெரியுமா? | Akash Ambani Emerges As Richest Ambani Heir

ஆண்டிலியா வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் மூன்று வாரிசுகள் குறித்த தகவலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில் அம்பானியின் மூன்று வாரிசுகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? அவர்களில் யார் பணக்காரர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

$ 108 பில்லியன் சொத்து மதிப்பு!! முகேஷ் அம்பானி வாரிசுகளின் யார் பணக்காரர் தெரியுமா? | Akash Ambani Emerges As Richest Ambani Heir

இஷா அம்பானி

முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்லின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து பல ரீரெய்ல் கடைகளை துவங்கி பல கோடி சம்பாதித்து வருகிறார்.

இஷா ரிலையன்ஸ் பவுண்டேஷன், ரிலையன்ஸ் ஜியோ இன்டர்காம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் மற்றும் பிற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வணிகங்களின் வாரிய உறுப்பினவும் இருந்து வருகிறார். இஷா அம்பானி ஆண்டுக்கு ரூ. 4.2 கோடி சம்பாதிப்பதாகவும் அவரின் சொத்து மதிப்பு ரூ. 800 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

$ 108 பில்லியன் சொத்து மதிப்பு!! முகேஷ் அம்பானி வாரிசுகளின் யார் பணக்காரர் தெரியுமா? | Akash Ambani Emerges As Richest Ambani Heir

ஆகாஷ் அம்பானி

மூத்த மகனான ஆகாஷ் அம்பானி, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவராக இருந்து வருகிறார். ஒரு ஆண்டுக்கு ரூ. 5.6 கோடி சம்பளமாக பெற்றும், சுமார் 40.1 பில்லியன் அமெரிக்க டாலரின்(₹3,32,815 crore) நிகர மதிப்புடன் அம்பானி வாரிசின் பணக்காரராக திகழ்கிறார். 

$ 108 பில்லியன் சொத்து மதிப்பு!! முகேஷ் அம்பானி வாரிசுகளின் யார் பணக்காரர் தெரியுமா? | Akash Ambani Emerges As Richest Ambani Heir

ஆனந்த் அம்பானி

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸின் பசுமைத் திட்டங்களுக்குப் பொறுப்பேற்றும், 2021 முதல் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜியின் வாரியங்களின் பொறுப்பை ஏற்று வருகிறார்.

2024 டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட பட்டியலின்படி ஆனந்த் அம்பானி, ஆண்டுதோறும் ரூ. 4.2 கோடி மதிப்புள்ள வருமானமாக பெற்று மாத சம்பளமாக ரூ. 32 லட்சமாக உயர்த்தியிருக்கிறார். ஆனந்த் அம்பானி சொத்து மதிப்பு 40 மில்லியன் அமெரிக்க டாலராக (₹3,32,482 crore)இருந்து வருகிறதாம்.