என்ன மன்னிச்சிடுங்க!! பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் எமோஷனல் வீடியோ..
சதீஷ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பாக்கியலட்சுமி. கடந்த ஆண்டு நிறைவடைந்த இந்த சீரியலுக்கு பின் முக்கிய ரோலில் நடித்த நடிகர் சதீஷ் எந்த சீரியலிலும் காணவில்லை.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கடந்த மாதம் தான் ஒரு புதிய சீரியலில் கமிட்டாகியதாகவும் மீண்டும் விஜய் டிவி மூலம் ரசிகர்களை சந்திக்க வருவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு தன்னிடம் இருந்து விலகிவிட்டதாக நடிகர் சதீஷ் மேலும் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
என்ன மன்னிச்சிடுங்க
அவர் பேசுகையில், நான் கமிட்டான அந்த சீரியல் சில காரணங்களால் இப்போது எனக்கு கிடைக்கவில்லை, அது நம்மைவிட்டு போய்விட்டது. சில விஷயங்கள் நம்மைவிட்டு போகும்போது அது கஷ்டமாக இருக்கும்.
ஆனால் பின் அது நமக்கு நன்மையாக மாறும். இப்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது, ஆனாலும் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க என்று கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகர் சதீஷ்.