இரவு முழுவதும் காதல் தோல்வியால் கதறி அழுத ஆத்மிகா, அழவைத்த காதலர் இவர் தானா

Aathmika
By Kathick Mar 20, 2023 09:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. சமீபத்தில் கூட உதயநிதியுடன் இவர் இணைந்து நடித்திருந்த கண்ணை நம்பாதே திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள நடிகை ஆத்மிகா தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியவராவது 'என்னுடைய காதல் தோல்வி என்னை மிகவும் பாதித்தது. என்னை காதலித்தவர் தான் என்னை விட்டு விலகி சென்றார். அதை நினைந்து நினைத்து இரவு முழுவதும் அழுதுருக்கிறேன். தற்போது தான் அதிலிருந்து மீண்டு கொண்டு இருக்கிறேன்.

வாழ்க்கையில் பணமா அல்லது புகழா முக்கியம் என யாரவது என்னிடம் கேட்டால், நிச்சயம் பணம் தான் என்று கூறுவேன். ஏனென்றால் அதுதான் எதார்த்தம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்' என கூறியுள்ளார்.