நான் தற்கொலை பண்ணிட்டன்னு சொன்னாங்க!! நடிகை அபர்ணதி ஓபன் டாக்..
நடிகை அபர்ணதி
பிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகர் ஆர்யாவிற்காக பெண் தேடும் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அதற்காக பல பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

அதில் முக்கிய இடத்தை பிடித்தவர் அபர்ணதி. நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காத ஆர்யா மீது கோபத்தில் அபர்ணதி இருந்திருக்கிறார். இதனையடுத்து, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகினார். பின் தேன், உடன்பால், டிமோன், இறுகப்பற்று, சாமானியன், மாய புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தேன் படத்திற்கான சிறந்த நடிகைக்காக தமிழக திரைப்பட விருதினை பெற்றார் அபர்ணதி. காளிதாஸ் படத்தில் நடித்துள்ள அபர்ணதி படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன்னைப்பற்றி வெளியான மோசமான தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
தற்கொலை பண்ணிட்டன்னு
அதில், நான் ஒரு ரியாலிட்டி ஷோ பண்ணேன். அந்த ஷோ முடிந்தப்பின் நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று யூடியூப் சேனலில் ஒரு செய்தி வெளியானதை பார்த்தேன்.

அது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால், ஷோ முடிந்தப்பின் வசந்தபாலன் சார் படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டேன், அப்போது நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஏன் இப்படி எல்லாம் சொல்லணும், கவலையாக இருக்கிறார் என்று கூட போட்டிருக்கலாமே, ஏன் தற்கொலை என்று போடவேண்டும் என்று தோண்றியதாக அபர்ணதி தெரிவித்துள்ளார்.