அர்ச்சனாவுக்கும் அபிநய்க்கும் இப்படியொரு தொடர்பா! புகைப்படத்தோடு அவர்களே வெளியிட்ட செய்தி..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரின் மார்க்கெட் அதிகரிப்பதை போன்று விஜே அர்ச்சனா வாழ்க்கையிலும் நடந்துள்ளது. பிக்பாஸ் 4ல் பங்குபெற்ற அர்ச்சனா அன்பு தான் ஜெய்க்கும் என்ற ஃபார்முலாவை பயன்படுத்தி கடைசியில் நிகழ்ச்சியை விட்டு சீக்கிரமே வெளியேறினார்.
இதையடுத்து யூடியூப் சேனலையும் மகளுடன் சேர்ந்து நடத்தி வருகிறார். கடந்த சீசனில் கலந்து கொண்ட பிக்பாஸ் அபிநய்யுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அர்ச்சனா இருவருக்கும் இப்படியொரு தொடர்பு இருப்பதை முதன்முதலாக கூறியுள்ளார்.
இருவரின் அம்மாக்கள் சிறு வயது தோழிகளாக இருந்துள்ளனர். ஏற்கனவே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர் என்று கூறியுள்ளார் அர்ச்சனா.
அபிநய் கடந்த பிக்பாஸ் 5ல் கலந்து கொண்டபோது பாவ்னியுடன் காதல் கிசுகிசுவால் மனைவியை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற வதந்திக்கு அதெல்லாம் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.