மறைந்த நடிகர் அபிநய்க்கு இப்படியொரு தோழியா? இரங்கல் சொன்ன முதல் நடிகை..
மறைந்த நடிகர் அபிநய்
மலையாள நடிகை ராதாமணியின் மகன் அபிநய் துள்ளுவதோ இளமை படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அவரின் தாய் தேசிய விருதை வாங்கியதை போல் இவரும் வாங்குவார் என்று எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் என்ன நேரமோ தெரியவில்லை அவருக்கு வெற்றி என்ற ஒன்று அருகில் வராமலே போய்விட்டது. வாய்ப்புகள் சமீபகாலமாக இல்லாமல் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த அபிநய், கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.

சொந்த உறவினர்கள் கூட அவரின் மறைவை கண்டுக்கொள்ளாமல் இருந்த நிலையில் கேபிஒய் பாலா உள்ளிட்ட சிலர் மட்டுமே அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அபிநய் பற்றி நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி
அதில், அபுநய்யுடன் சேர்ந்து ஒரு விளம்பர படத்தில் நடித்தேன். சென்னை 28 படத்தை முடித்திருந்த சமயம் அது. அந்த விளம்பர பட ஷூட்டிங் டெல்லியில் 4 நாட்கள் நடந்தது. இப்போது இருப்பதுபோல் அப்போது நான் இருக்கவில்லை. அறிமுகமில்லாதவர்களை பார்த்தால் பயம் வந்துவிடும். கூச்ச சுபாவம் கொண்டிருந்தேன். நான் தங்குவதற்கு ஒரு அப்பார்ட்மெண்ட் கொடுக்கப்பட்டது. அங்கு அபிநய்யும் தங்கியிருந்தார்.

நான் அப்போது ஃபெரோஸ்(கணவர்) காதலித்துக் கொண்டிருந்தேன். இன்னொரு ஆணுடன் இருப்பதை அவரிடம் சொல்வதை தவிர்த்தேன். பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் அபிநய் ஜென்டில்மேன். தொழிலில் நேர்மை கொண்டவர், ஒவ்வொரு ஃபேமையும் தனதாக்கிக்கொள்வார்.
ஷுட்டிங் முடிந்து அந்த அப்பார்ட்மெண்ட் ஹாலில் அமர்ந்து அவர் குடித்துக்கொண்டிருப்பார். உடன் யாரும் இருக்கமாட்டார்கள். முழு பாட்டிலையும் தீர்த்துவிடுவார். இப்படி தனியாக குடிப்பதை பார்க்கையில் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். ஒருநாள் நான் அவரை பார்ப்பதை கவனித்துவிட்டார். என்னை அருகே அமர சொன்னார். அப்போது நான் ஏன் இப்படி குடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவரோ முதலில் குடிக்கிறாயா என்று கேட்டார். எனக்கு பழக்கமில்லை என்றேன்.
அடுத்து ஒரு கூல் ட்ரிங்க்கை கொடுத்தார். அதை வாங்கவும் பயம், பின் தனது வாழ்க்கையில் நடந்தது, அம்மாவுக்கு ஏற்பட்ட வலிகள் பற்றி நிறைய நேரம் மனம் திறந்துபேசினார். அதன்பின் ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது நன்றி விஜயலட்சுமி, என்னிடம் இதற்கு முன் இப்படி யாரும் கேட்டதில்லை, கடவுள் இப்படியும் சில பெண்களை படைக்கிறார், ஒருவேளை உனக்கு சகோதரி இருந்தால் எனக்கு தெரியப்படுத்து என்று சொல்லிவிட்டு சென்றார், அதுதான் எங்களது கடைசி சந்திப்பு.
இப்போது இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் எனக்கு அழுகை வருகிறது, ஆனால் இது வருத்தமான ஒன்றில்லைம் அவருடைய போராட்டம் முடிவுக்கு வந்ததை நினைத்து மகிழ்ச்சி, அவர் அமைதியை கண்டடைந்துவிட்டார், நான் அமைதியாக இளைப்பாருங்கள் என்று சொல்லமாட்டேன், சந்தோஷமாக கொண்டாடு என்று தான் சொல்வேன். இம்முறை வலிகளை நினைத்து குடிக்கமாட்டார், தன் விடுதலையை ருசித்து குடிப்பார் என்று விஜயலட்சுமி எமோஷனலான பதிவினை பகிர்ந்திருக்கிறார்.