பார்ட்டி, பப், சரக்குன்னு ஜாலியா இருந்தேன்..எல்லாமே போச்சு!! நடிகை சோனாவின் மறுப்பக்கம்...

Gossip Today Instagram Tamil Actress Actress
By Jai May 23, 2026 11:02 AM GMT
Report

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கையை மையப்படுத்தி ஸ்மோக் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இரு சிசன்களாக உருவாகியுள்ள இந்த தொடரில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் 99 சதவீத உண்மையை மட்டுமே பதிவு செய்ததாக சோனா தெரிவித்தார்.

வெப் தொடரின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் சோனா, இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அதன்மூலம் பணம் சம்பாதிப்பது குறிது பேசியுள்ளார்.

பார்ட்டி, பப், சரக்குன்னு ஜாலியா இருந்தேன்..எல்லாமே போச்சு!! நடிகை சோனாவின் மறுப்பக்கம்... | Sona Emotional About Marriage Insta Subscription

பிரச்சனைகளுக்கு நானே காரணம்

இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரைபர் மூலம் பணம் சபாதிக்கலாம் என்ற விஷயம் எனக்கு 7, 8 மாதங்களுக்கு முந்தான் தெரியும். அதைப்பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இப்படியும் பணம் சம்பாதிக்க முடியுமா என நினைத்தேன். அந்தமாதிரி சம்பாதிப்பது இப்போது வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், ஆனால் அது வாழ்க்கையை பாதித்துவிடும், அதற்கு நானே ஒரு உதாரணம்.

ஒரு காலத்தில் பார்ட்டி, பப், சரக்கு என்று மிகவும் ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்தேன். ஆனால் இன்று அனைத்தையும் நான் விட்டுவிட்டேன். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்ததால் தான் எனக்கு பல பிரச்சனைகள் வந்தது. அந்த பிரச்சனைகளுக்கு நானே காரணம் என்பதால் அதற்கான பாதிப்பையும் அனுபவித்தேன்.

பார்ட்டி, பப், சரக்குன்னு ஜாலியா இருந்தேன்..எல்லாமே போச்சு!! நடிகை சோனாவின் மறுப்பக்கம்... | Sona Emotional About Marriage Insta Subscription

என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவர்கள் கூட நீ பார்ட்டியில் அப்படித்தான் நடந்து இருப்ப என்று சந்தேகப்பட்டார்கள். அவர்களிடம் நான் அப்படி இல்லை என்று நிரூபிக்க வீடியோவை எடுத்துக்காட்ட முடியுமா?

ஆண்கள் தவறு செய்தாலும் அது பெரிதாக வெளியில் தெரியாது, ஆனால் பெண்கள் செய்யும் ஒரு தவறு இந்த சமூகம் பெரிதாக பேசும். அதனால் தான் இன்றும் நான் கல்யாணமாகாமல் தனியாக இருக்கிறேன்.

பார்ட்டி, பப், சரக்குன்னு ஜாலியா இருந்தேன்..எல்லாமே போச்சு!! நடிகை சோனாவின் மறுப்பக்கம்... | Sona Emotional About Marriage Insta Subscription

இப்போது சப்ஸ்கிரைப் மூலம் பணம் வரலாம், எல்லாமே நன்றாக இருக்கலாம், ஆனால் 10 வருஷத்துக்குபின் திருமணம் போன்ற விஷயங்களில் பிரச்சனைகள் வரவாய்ப்புள்ளது. இன்று நான் எப்படி சில விஷயங்களை நினைத்து வருந்துகிறேனோ, அதுபோல் பின்னாளில் அவர்களும் வருந்த வேண்டிய சூழல் வரக்கூடும்.

அதனால் எதை செய்தாலும் யோசித்து செய்யுங்கள். நான் இளமையாக இருந்தபோது திமிரு, தெனாவட்டு, ஈகோ எல்லாம் இருந்தது. ஆனால், வாழ்க்கை எனக்கு ஒவ்வொரு பாடமாக கற்றுக்கொடுத்தது. அந்த அவமாஅத்தால் எல்லாத்தையும் விட்டுவிட்டு தனியாக உட்கார்ந்து இருக்கேன் என்று சோனா வெளிப்படையாக பேசியுள்ளார்.