அப்போ டைவர்ஸ் இல்லையா! அபிநய்-க்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி அபர்ணா

divorce biggbosstamil5 abhinay biggbossultimate aparnabhinay
By Edward Feb 15, 2022 07:24 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் மூலம் மக்களுக்கு அறிமுகமாகியவர் அபிநய். தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார். நிகழ்ச்சியில் பாவ்னியுடன் பிரச்சனை ஏற்பட்டு காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

இதனால் அபிநய் மனைவி கோபத்தில் கணவர் பெயரை சமுகவலைத்தளத்தில் இருந்து எடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இருவருக்கும் ஒரு கட்டத்தில் விவாகரத்தாகவுள்ளது என்ற செய்தியும் வெளியாகி வைரலானது. ஒரு குடும்பத்தை இப்படியா கெடுப்பது என்று பலர் விமர்சித்திருந்தனர்.

இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றுள்ள அபிநய்-க்கு அவரது மனைவி அபர்ணா காதலர் தினத்தன்று வாழ்த்துக்கள் கூறி வீடியோ வந்துள்ளார். இதை கண்டு ரசிகர்கள் பாவம்டா ரெண்டு பேரும் சந்தோஷமா தான் இருக்கங்க. அப்படி கதையை உருட்டிவிட்டீங்களே என்று கூறி வருகிறார்கள்.