திருமணமாகி 14 வருஷத்துக்கு பின் குழந்தையை தத்தெடுத்த கமல் பட நடிகை!! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அபிராமி. மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அபிராமி நடிகர் கமல் ஹாசனின் விருமாண்டி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
அப்படத்திற்கு பின் சினிமாவில் மிகப்பெரிய கேரியர் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் நடிகை அபிராமி 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
இதற்கு காரணம் விருமாண்டி படத்தில் கமல் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தென்னிந்திய சினிமா படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் ராகுலை திருமணம் செய்து 14 ஆண்டுகளுக்கு பின் அபிராமி ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளாராம். இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாங்கள் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா அம்மாவாக மாறியிருக்கிறோம் என்றும் கடந்த ஆண்டு அவளை நாங்கள் தத்தெடுத்தோம்.
ஒரு தாயாக இந்த அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி என்றும் குழந்தைக்கு கல்கி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை அபிராமி.