4 குழந்தைகளுக்கு அம்மா..நிஜ வாழ்க்கையில் அப்படி செய்ய முடியாது!! நடிகை அபிராமி..
நினைத்தேன் வந்தாய்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவு 6 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் நினைத்தேன் வந்தாய். நடிகர் கணேஷ் வெங்கட், நடிகை கீர்த்தனா, அஞ்சலி ராவ், பிக்பாஸ் நடிகை அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார். தற்போது டிஆர்பிக்காக சீரியலில் ரொமான்ஸ் காட்சி வைத்துள்ளது ட்ரோல் கண்டெண்டாக மாறியிருக்கிறது.
நடிகை அபிராமி
ஆரம்பத்தில் சுடர் என்ற ரோலில் நடிகை ஜாஸ்மின் என்பவர் நடித்து வந்த நிலையில், திடீரென அவர் விலகிவிட்டார். அவருக்கு பதில் நடிகை அபிராமி சுடர் ரோலில் நடித்து வருகிறார். 4 குழந்தைகளுக்கு அம்மா ரோலில் நடித்து வருவது குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார் அபிராமி.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை உணர்வு இருக்கும். அதனால் இந்த ரோலில் நடிப்பது எளிதாகவும் ரீபிளேஸ்மெண்ட் ரோலில் நடிப்பது சவாலாகவும் இருக்கிறது. ஒரு முகத்தை பார்த்துவிட்டு மற்ற முகத்தை பார்க்க வைப்பது சிரமான ஒன்று, அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்.
4 குழந்தைகளுக்கு அம்மா
தான் எப்போதும் கிளிசரின் போடாமல் சோகமான காட்சியில் நடிப்பேன். வெளியில் சிரித்துக் கொண்டு பேசினாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சோகம் இருக்கும். தன்னுடைய போராட்டாங்களை நினைத்துக்கொண்டாலே கிளிசரின் இல்லாமல் தானாகவே கண்ணீர் வந்துவிடும்.
நினைத்தேன் வந்தாய் சீரியலில் சுடர் ரோல் கொஞ்சம் வாலுத்தனமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் செய்யும் விஷயங்கலை இதில் செய்யமுடியாது என்று அபிராமி தெரிவித்துள்ளார்.