பட வாய்ப்பு இல்லை புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கவி

Sanghavi Tamil Cinema
By Yathrika Jan 26, 2026 05:30 AM GMT
Report

சங்கவி

தமிழில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கவி.

1993ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கொக்கரக்கோ என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் அமராவதி, ரசிகன், நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 15 வருடங்களில் நிறைய படங்கள் நடித்துள்ளார். தற்போது என்ன தகவல் என்றால் சங்கவி இப்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறாராம்.

பாளையத்து அம்மன் என பெயரிடப்பட்டுள்ள புதிய தொடரில் நடிக்கிறாராம், இந்த புதிய சீரியல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

பட வாய்ப்பு இல்லை புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கவி | Actress Sanghavi Entry In Serial