கமலுடன் முத்தக்காட்சியால் சர்ச்சை.. நடிகை அபிராமி கொடுத்த விளக்கம்

Kamal Haasan Abhirami
By Kathick May 30, 2025 03:30 AM GMT
Report

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கமலுடன் முத்தக்காட்சியால் சர்ச்சை.. நடிகை அபிராமி கொடுத்த விளக்கம் | Abhirami Talk About Kiss Scene With Kamal

வருகிற ஜூன் 5ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளிவந்தது. இந்த டிரைலரில் கமல் - அபிராமி முத்தக்காட்சி இடம்பெற்று இருந்த நிலையில், அது சர்ச்சையானது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை அபிராமி. "அது 3 வினாடி கிஸ் சீன் தான். அது டிரைலரில் இடம்பெற்றதுதான் தவறாக எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. அது அந்த காட்சிக்கு தேவையானதுதான் என்பது படத்தில் பார்க்கும் போது புரியும். தற்போது இது குறித்து பேசுவது தேவையில்லாதது.

கமலுடன் முத்தக்காட்சியால் சர்ச்சை.. நடிகை அபிராமி கொடுத்த விளக்கம் | Abhirami Talk About Kiss Scene With Kamal

வேறு எந்த நடிகரும் முத்த காட்சியில் நடித்ததில்லையா? உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் நடித்தால் மட்டும் மக்கள் அதைப்பற்றி பேச தொடங்கிவிடுகிறார்கள். இப்போது இதெல்லாம் சாதாரணம்" என அவர் கூறியுள்ளார்.