அந்த தொழில் செய்யும் பெண்ணாக பிக்பாஸ் அபிராமி! படவாய்ப்பில்லாமல் திடீர் முடிவெடுத்த நிலை..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்கள் சினிமாவில் பிஸியாக படங்களில் கமிட்டாகி வருகிறார்கள். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்பே நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிராமி. மாடலிங் துறையில் ஆரம்பித்து தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
ஆனால் ஹீரோயினாக அப்படியான படங்கள் எதுவும் கிட்டாமல் தவிர்த்து வருகிறார் அபிராமி. தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடிக்கவேண்டும் என்ற கூறி வந்த அபிராமி விரைவில் பாலியல் தொழிலாளியாக த லாஸ்ட் கஸ்டமர் என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இந்த படத்தின் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது. ஹீரோயினாக வெள்ளித்திரையில் ஜொலிப்பார் என்று பார்த்தால் குணசித்திர நடிகையாக மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதிலும் இந்த மாதிரி பாலியல் தொழிலாளி வேடம் எல்லாம் கிடைத்தால் பின்னர் எப்படி ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
இருந்தாலும் பாலியல் தொழிலாளியாக நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
