நடிகை சாரா அர்ஜுனின் சமீபத்திய கலக்கல் புகைப்படங்கள்
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை சாரா அர்ஜுன். இதன்பின், துரந்தர் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
தெய்வமகள் படத்தில் குழந்தையாக வந்த சாராவா இது? என அனைவரும் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டனர். துரந்தர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அளவில் சென்சேஷனல் கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
அடுத்ததாக இவர் நடிக்கப்போகும் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாரா அர்ஜுன், சமீபத்தில் தான் மாலத்தீவிற்கு சென்றிருப்பதாக பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தற்போது The most beautiful few days at Maldives என குறிப்பிட்டு சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சாரா அர்ஜுனின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:




