கிழிந்த பேண்ட்டில் இப்படியொரு போஸ்.. பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்..

Abhirami Bigg Boss
By Edward Sep 20, 2022 08:47 AM GMT
Report

மாடலிங் துறையில் இருந்து வந்த அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அந்த படம் திரையில் வெளியாக அபிராமிக்கும் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் ஆதரவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற்றாரோ இல்லையோ நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பெற்றார்.

அதன்பின் ஒருசில படங்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த அபிராமி இந்த ஆண்டு சிம்புவால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

2 ஆம் ரன்னர் அப் இடத்தினை பிடித்த அபிராமி இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

அந்தவகையில் தறோது வீட்டில் தனிமையில் கிழிந்த ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.