விருமாண்டி படத்தால் அமெரிக்காவுக்கு ஓடிய நடிகை!! ரகசியமாக கமல் ஹாசன் செய்த செயல்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்ன்ணி நடிகையாக இருந்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அபிராமி. மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் வானவில், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்லின், கார்மேகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் 2004ல் வெளியான விருமாண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். அப்படத்திற்கு பின் அபிராமி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இதற்கு காரணம் விருமாண்டி படத்தில் கமல் ஹாசன் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று பல வதந்திகள் வெளியாகியது. ஆனால், அப்படி கமல் ஹாசன் அபிராமிக்கு டார்ச்சர் கொடுக்கவில்லை என்றும் பலர் கூறி வந்துள்ளனர்.
நடிகை அபிராமி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக பல நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்தும் வந்திருக்கிறார். அப்படி திருமணத்திற்கு பின் விஸ்வரூபம் படத்தில் நடிகை பூஜா குமாருக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார்.
அவர் தான் வேண்டும் என்று அபிராமியை கமல் ஹாசன் தேர்வு செய்திருந்தாராம். கமல் ஹாசனே இதுகுறித்து பேசிய வீடியோவை பார்த்து அபிராமி ஷாக்காகியும் இருக்கிறார்.
கமல் ஹாசன் தான் என்னை மீண்டும் என்னை நடிக்கவும் விஸ்வரூபம் படத்தில் டப் பண்ண வைத்ததும் அவர் தான் என்று உருக்கத்துடன் கூறியிருக்கிறார் அபிராமி. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.