90ஸ் நடிகை அபிராமியா இது! கமலுடன் எடுத்த முதல் புகைப்படம்

serial abhirami kamalhaasan tamilactress
By Edward Nov 14, 2021 10:49 AM GMT
Report

90களில் அதிகமாக கேரள நடிகைகள் அறிமுகமாகி முன்னணி நடிகைகள் என்ற அந்தஷ்த்தை பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை அபிராமி. மலையாள நடிகையாக இருந்து தமிழில் வானவில் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

இதையடுத்து தோஸ்த், மிடில்கிளாஸ் மாதவன், சமஸ்தானம், போன்ற படங்களில் நடித்தார், இதையத்து நடிகர் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். சமீபத்தில் அப்படத்தில் கமல் டார்ச்சர் செய்தார் என்று கூறிய பின் சினிமா பக்கமே தலைக்காட்டாம் இருந்தார்.

பின் ராகுல் பாவணன் எனபவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகினார். பின் நடிகை ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியதோடு அவருடன் முதன் முதலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதைபார்த்து நீங்களா இது என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.