ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்தா.. மௌனம் கலைத்த அபிஷேக் பச்சன்!!
உலக அளவில் பாப்புலராக இருக்கும் ஐஸ்வர்யா ராய், கடந்த 2007 -ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.
17 ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகின.
சமீபத்தில் நடந்த முடிந்த அம்பானி மகன் திருமண நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தனி தனியாக கலந்துகொண்டனர். இதனால் அவர்கள் விவாகரத்து கிட்டத்தட்ட உண்மை தான் என்கிற அளவுக்கு பேசத் தொடங்கினர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அபிஷேக் பச்சன், அவருடைய திருமணம் மோதிரத்தை காட்டி, "நாங்கள் இன்னும் தம்பதியாக இருக்கோம். இதை குறித்து நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. நான் எதாவது சொன்னால் அது வேறுவிதத்தில் சென்றுவிடும். ஏன் மாதிரி எல்லாம் பேசுகிறார்கள் தெரியவில்லை என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
