பாவனியால் மனைவியை விவாகரத்து செய்த பிக் பாஸ் அபினை.. அட, பாவி இதுவேறையா
பிக் பாஸ் 5வில் காதல் சர்ச்சையில் சிக்கிய ஜோடி, பாவனி மற்றும் அபிநய். இவருக்கும் ஏற்பட்ட காதல் சர்ச்சையின் காரணமாக அபிநய்யை அவரது மனைவி அபர்ணா விவாகரத்து செய்துவிட்டார் என்று தகவல் வெளியாகியிருந்தது. அதற்கு ஏற்றாற்போல் அபிநய்யின் மனைவி, தனது கணவரின் பெயரையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார். ஆனால், இது வெறும் வதந்திதான் என்று தெரிவித்திருந்தார்.
பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக அபிநய் களமிறங்கினார். இதில், ஒரு முறை தனது கணவரை காண தனது மகளுடன் டிவியில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். இதன்முலம் இருவரும், ஒன்றாக தான் வாழ்த்து வருகிறார்கள் என்று உறுதியானது. ஆனால், எதிர்பாராத விதமாக பிபி அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து அபிநய் வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய, அபிநய்யிடம் ரசிகர் ஒருவர் 'உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா' என கேட்டார். இதற்கு பதிலளித்த அபிநய், ' இது போற்ற தவறான செய்திகளை சமூக வலைத்தளத்தில் சிலர் பரப்பி வருகிறார்கள். இது உண்மையில்லை. நானும் எனது மனைவியும் நன்றாக வாழ்ந்து வருகிறோம்' என்று அபிநய் தெரிவித்துள்ளார்.
