அடுத்த கபூர் - பட் வாரிசு ரெடி!! திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் நடிகை ஆலியா பட்

Pregnancy Alia Bhatt Indian Actress
By Edward Jun 27, 2022 06:02 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட் சங்கார்ஷ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதையடுத்து ஸ்டூடண்ட் ஆப் தி இயர் போன்ற படங்களில் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளில் வரிசையில் இணைந்தார்.

ஆலியா - ரன்பீர்

சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற ஆலியா பட் நடிகர் ரன்பீர் கபூருடன் 5 வருடங்களாக காதலில் இருந்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். திருமணம் முடிந்த கையோடு அடுத்த நாளே இருவரும் தங்களின் படங்களில் கவனம் செலுத்த படப்பிடிப்பிற்கும் பிரமோஷன் வேலைகளுக்கும் சென்று விட்டனர்.

அடுத்த கபூர் - பட் வாரிசு ரெடி!! திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் நடிகை ஆலியா பட் | Aby On The Way Alia Bhatt Ranbir Kapoor

முதல் குழந்தை

தற்போது இருவரும் இணைந்து Brahmāstra என்ற படத்தில் நடித்துள்ளனர். கூடிய சீக்கிரம் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஆலியா பட் - ரன்வீர் கபூர் தங்களின் முதல் குழந்தை பிறக்க போவதாக புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் திருமணமாகிய நிலையில் ஆலியா பட் கர்ப்பமாகவுள்ளார் என்ற செய்தியை புகைப்படத்தோடு தம்பதிகள் சமுகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.