ரூ. 4000 கோடி பாக்ஸ் ஆபிஸ் நாயகன்!! 46 வயதில் காதலில் தேடும் பான் இந்தியா ஸ்டார்...
நடிகர் பிரபாஸ்
கடந்த 2002ல் தெலுங்கில் வெளியான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் பிரபாஸ். இதனையடுத்து ராகவேந்திரா, வருஷம் போன்ற படங்களில் நடித்தார்.
பின் 2005ல் ராஜமவுலி இயக்கத்தில் சத்ரபதி என்ற படத்தில் நடித்தன் மூலம் புது அடையாளத்தை பிரபாஸுக்கு கொடுத்தது. அதேபோல் 2010ல் வெளியான டார்லிங் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அடுத்த படமான மிஸ்டர் பர்ஃபெக்ட் பிரபாஸுக்கு கைக்கொடுத்தது. ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 80 கோடி வசூலித்த மிர்ச்சி படம் ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்தது.
4000 கோடி பாக்ஸ் ஆபிஸ்
பின் பிரபாஸுக்கு வேறொரு ரூட்டை மாற்றிய படம் தான் பாகுபலி. பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்து இரு பாகமும், ரூ. 2000 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. கல்கி 2898 ஏடி படமும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலிக்க, சலார் 700 கோடி ரூபாயும் சாஹா ரூ. 500 கோடி வசூலையும் ஈட்டியது. இதன்மூலம் 4000 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகனாக மாறினார் பிரபாஸ்.

அதேபோல், ஆதி புருஷ், ராதே ஷ்யாம், தி ராஜா சாப் படங்கள் தொடர் தோல்வியை பிரபாஸுக்கு கொடுத்ததோடு வசூலிலும் மிகப்பெரிய அடியை கொடுத்தது. 46 வயதை எட்டியுள்ளர் பிரபாஸ், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக் இருக்கிறார்.

காதலில் விழ விரும்புகிறேன்
சமீபத்தில் பிரபாஸ் அளித்த பேட்டியொன்றில், நானும் காதலில் விழ விரும்புகிறேன், அது எவ்வளவு அற்புதமான அனுபவம் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். அந்த தருணத்திற்காக நான் காத்திருக்கிறேன் என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார். விரைவில் அவர் திருமண பந்தத்தில் இணைவார் என்ற ஆவலில் அவரது ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.