தீவிர சிகிச்சையில் நடிகர் அபிநய்!! தற்போதைய நிலை இதுதான்..
Liver
Tamil Actors
Disease
By Edward
நடிகர் அபிநய்
சினிமாவில் நடிக்கும் எத்தனையோ நடிகர், நடிகைகள் ஆள் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்தவகையில், நடிகர் தனுஷ், ஷெரின் உள்ளிட்ட பல நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகர் அபிநய் தான் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.
சாக்லெட் பாய் லுக்கில் இருக்கும் அபிநய் அமெரிக்க மாப்பிள்ளை, இரண்டாம் ஹீரோ என பல ரோலில் நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன் தான் ரொம்பவே கஷ்டப்பட்டு வந்துள்ளேன் என்று பேட்டியொன்றில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் லிவர் சீரோசிஸ் (Liver Cirrhosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள அபிநய், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேல் சிகிச்சைக்கு மேலும் 28 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால் உதவி செய்யுமாறும் உருக்கமாக கேட்டுள்ளார்.

