தனது அடுத்த படத்திற்காக அஜித் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Ajith Kumar Adhik Ravichandran
By Kathick Jun 17, 2025 03:30 AM GMT
Report

அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. மேலும் அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாகவும் அமைந்துள்ளது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது AK 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனுக்குதான் அஜித் கொடுத்துள்ளார். ஆம், ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் அஜித்தின் AK 64 படத்தை இயக்குநர் ஆதிக் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தனது அடுத்த படத்திற்காக அஜித் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Ajith Kumar Ak 64 Movie Salary Details

இதனால் மீண்டும் ஒரு Fan Boy சம்பவம் லோடிங். இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக அஜித் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

போனபடத்திற்காக ரூ. 163 கோடி சம்பளமாக பெற்றிருந்த அஜித், AK 64 படத்திற்காக ரூ. 180 கோடி சம்பளமாக வாங்கவுள்ளாராம். மேலும் இப்படத்தை இயக்கப்போகும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ. 12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.