திருமண வாழ்க்கை வாழ முடியாமல்.. விஜய்யை வெளுத்து வாங்கிய பாக்யராஜ்
விஜய்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி திரைப்படமாகும். இப்படத்தை முடித்த கையோடு முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
தற்போது அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வரும் விஜய் சமீபத்தில், தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் குடும்ப அரசியல் குறித்து ஆவேசமாக பேசியிருந்தார்.
பாக்யராஜ் அதிரடி
இந்நிலையில், நடிகர், இயக்குநர், திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் இந்த பிரச்சனை குறித்து மேடை ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "எது குடும்ப அரசியல்? மு.க.ஸ்டாலின் அவரது 67 வயதில் தான் முதலமைச்சர் ஆனார். கலைஞர் கருணாநிதி அவரை அருகில் வைத்து அனைத்தையும் பொறுமையாக கற்றுக் கொடுத்தார்.
திருமணமான போது அவரது திருமண வாழ்க்கையை கூட சந்தோஷமாக வாழ முடியாமல், மிசாவில் சிறை சென்றவர். திமுக தொண்டர்கள் உங்களுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களை தொண்டர்களாக மாற்ற முயற்சித்தால் அவர்களும் உங்கள் படத்தை பார்க்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.