விஜய் மகன் இல்லை, பெயர் உண்டு!! கடுப்பான நடிகர்.. அப்படி என்ன ஆச்சு?
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக தற்போது வலம் வருபவர் நடிகர் விஜய். அவரது படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூலை குவிக்கிறது. இருப்பினும் இவர் சினிமாவை விட்டு விரைவில் விலகி முழு நேர அரசியலில் இறங்க போகிறார்.
சூழல் இவ்வாறு இருக்க இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா குறித்து படித்து முடித்துவிட்டு தற்போது கோலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார்.
அதில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்து வருகிறார். படம் டிராப் ஆகிவிட்டது என சமீபத்தில் செய்திகள் பரவியது. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை.
அப்படி என்ன ஆச்சு?
இந்நிலையில், நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த போது அவரிடம் செய்தியாளர்களால் சில கேள்விகளை கேட்டனர்.
அதாவது, விஜய் மகன் படம்.. என செய்தியாளர் கேள்வி கேட்க தொடங்கியதும், "விஜய் மகன் என்று சொல்லாதீங்க, ஜேசன் சஞ்சய் என அவருக்கு பெயர் இருக்கிறது.
அந்த படம் ஷூட்டிங் தொடங்கி சென்றுகொண்டிருக்கிறது. சூப்பரான ஒரு படமாக அது வரும்" என கூறியுள்ளார் சந்தீப் கிஷன்.