சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட அஜித்குமார்.. இப்படியொரு தொழில் தேவையா?

Ajith Kumar Thunivu
By Edward Oct 21, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்திற்கு பிறகு எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தான் அப்படத்தின் முழு படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து பைக் ரைடினை மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார் அஜித்.

துணிவு படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 62 வது படத்தில் நடிக்கவுள்ளார். இணையத்தில் அஜித் பற்றிய பல தகவல்கள் வைரலாகி வரும்.

அப்படி அஜித் கொடுத்த பேட்டியொன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், ஈரோட்டில் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் குறித்த பிசினஸ் தொடங்கியதாகவும், அப்போது மாடலிங் மற்றும் மோட்டார் பைக் ரேஸில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் கூறினார்.

இதனால் பிசினஸில் கவனம் செலுத்த முடியாமல் நஷ்டம் ஏற்பட்டது என்றும் இதன்பின் மாடலிங், நடிப்பில் கவனம் செலுத்தியதாகவும் கூறியிருந்தார்.

Gallery