சல்மான் கானின் பாந்த்ராவின் புதிய வீடு!! எத்தனை கோடி செலவு தெரியுமா?

Bollywood Salman Khan Mumbai
By Jai Jun 27, 2026 08:45 AM GMT
Report

சல்மான் கான்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கானின் நீண்டநாள் கனவு நனவாகவுள்ளது. மும்பை பாந்த்ராவில் சல்மான் கான் கட்டவுள்ள 6 மாடி வீட்டிற்கு பிரஹம் மும்பை மாநகராட்சி இன்று அதிகாரப்பூவமான அனுமதியை வழங்கியுள்ளது.

சல்மான் கானின் பாந்த்ராவின் புதிய வீடு!! எத்தனை கோடி செலவு தெரியுமா? | Salman Khan New House Bmc Approves 6 Story Bandra

கடற்கரையோரம் அமையவுள்ள இந்த வீட்டிற்கான கட்டிட வரைப்படங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பாதுகாப்பு, சுற்றுசூழல் விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாக பிஎம்சி தெரிவித்துள்ளது.

அரபிக்கடலின் ரம்மியமான சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் வகையில், பாந்த்ராவின் ப்ரீமியம் கடற்கரை பகுதியில்தான் இந்த வீடு அமையவுள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான கட்டிடத்தில், சல்மான் கானுக்காக பிரத்யேக ஜிம், மிகப்பெரிய ரெக்கர்டிங் ஸ்டுடியோ, கேரவன் வான் நிறுத்துவதற்கான தனி இடமும் அமையவுள்ளது.

சல்மான் கானின் பாந்த்ராவின் புதிய வீடு!! எத்தனை கோடி செலவு தெரியுமா? | Salman Khan New House Bmc Approves 6 Story Bandra

பாந்த்ரா கடற்கரை பகுதியிலுள்ள சொத்துக்களின் மதிப்பு பொதுவாக ரூ. 80 முதல் ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும். அப்படி சல்மான் கானின் அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 80 - ரூ. 120, கட்டுமானச் செலவு ரூ. 15 கோடி முதல் ரூ. 25 கோடி, பாதுகாப்பு தொழில்நுட்பம் ரூ. 5 முதல் ரூ. 10 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம்.