அனுஷ்கா ஜிலேபி மாதிரி.. அவரின் அந்த இடம் எனக்கு பிடிக்கும்.. காமெடி நடிகரின் சர்ச்சை பேச்சு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

சர்ச்சை
அனுஷ்கா நடிப்பில் 2015 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் இஞ்சி இடுப்பழகி. இப்படம் தெலுங்கில் சைஸ் ஸிரோ என்ற தலைப்பில் வெளியானது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் அலி, அனுஷ்காவை குறித்து மோசமாக பேசியுள்ளார். அதில் அவர், " அனுஷ்கா ஜிலேபி போன்றவர் எல்லாரும் அவரை விரும்புவார்கள்.
அனுஷ்காவிற்கு அழகான தொடை இருக்கிறது. இவர் நடித்த பில்லா படத்தை பார்த்த பிறகு நானும் அனுஷ்கா ரசிகராக மாறிவிட்டேன்" என்று ஆபாச வார்த்தையில் பேசியிருப்பார்.
இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை ஆனது. இதன் பின்னர் நடிகர் அலி அனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்டார். ஏற்கனவே நடந்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
