50 வயதில் திருமணம் செய்துகொண்ட சென்னை 28 பட நடிகர்... போட்டோஸ்
Tamil Cinema
Marriage
Tamil Actors
By Yathrika
அரவிந்த் ஆகாஷ்
சினிமாவில் பல வருடங்கள் ஏதோ ஒரு வேலை செய்து வந்தாலும் அரவிந்த் ஆகாஷிற்கு அங்கீகாரம் கொடுத்தது வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான சென்னை - 600028 படம் தான்.
அப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா, சென்னை 28 பார்ட் 2 என எல்லா படங்களிலும் நடித்து வந்தார்.

50 வயதை எட்டியும் சிங்கிளாகவே இருந்து வந்த அரவிந்த் ஆகாஷிற்கு இப்போது கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
அரவிந்த் ஆகாஷ் திருமணத்திற்கு சென்னை 28 பட பிரபலங்கள் அனைவரும் சென்றுள்ளனர். அரவிந்த் திருமணம் மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்துள்ளது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
