பிக்பாஸ் 10 தொடங்கி 2 நாள் தான் ஆகுது!! நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்..
பிக்பாஸ் 10
விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 10.

இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக இந்த சீசனில் பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே எவிக்ட்டாகி அறிமுக மேடையில் இருந்தபடியே வெளியேறினர். அப்படி முதல் ஆளாக நடிகை ஷப்னம் வெளியேறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி 2 நாட்களான நிலையில் பிளாக் பாண்டி, நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியிருக்கிறார். இதுதொடர்பாக விசாரித்ததில், உடல்நலனை காரணம் காட்டி அவரது வெளியேற்றம் நிகழ்ந்துள்ளதாம்.
ஷதிகாவுக்கும் ஜான்சனுக்கு இடையே காரசாரமான சண்டை நடந்தபோது அவர்களை சமாதானப்படுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் பிளாக் பாண்டி. இரவு 2 மணிக்கு நடைபெற்ற முதல் லக்சுரி பட்ஜெட் டாஸ்கிலும் தன்னால் முடிந்தளவுக்கு கடுமையாக உழைத்தார்.
என்னென்ன பொருட்கள் என்பது டாஸ்க் போர்ட்டில் தமிழில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார் பிளாக் பாண்டி.
ஆனால், நேற்று வீட்டில் கிச்சன் டீமிலிருந்து அனைவருக்கும் என்னென்ன தேவை என்பதை செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு, மருத்துவ பிரச்சனை ஏற்பட்டதால் பிக்பாஸ் வீட்டின் மருத்துவ குழிவின் பரிந்துரைப்படி அவர் தற்காலிகமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டிற்குள் வருவாரா? அல்லது முழுமையாக விலகுவாரா என்ற தகவல் வெளியாகவில்லை.
