விவாகரத்திற்கு முன்பு மகள் இல்லை என வருத்தப்பட்ட தனுஷ்!.. அவரே சொன்ன உண்மை

Dhanush Aishwarya Rajinikanth
By Dhiviyarajan Jul 16, 2023 07:59 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் பிரபலம் தான் தனுஷ். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

கோலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் கடந்த 2022 -ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விவாகரத்து முன்பு பேட்டி ஒன்றில் பங்கேற்ற தனுஷ், தன்னுடைய அண்ணன் செல்வராகவனின் மகள் குறித்து பேசியுள்ளார்.

அதில், " செல்வராகவனின் மகள்பெயர் லீலாவதி. தாய், தந்தை, தாத்தா, பாட்டிக்கு பிறகு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்தது சித்தப்பா நான் மட்டும் தான். அவுங்களுக்கு நான் என்ன பண்ணாலும் பிடிக்கும். என்னுடைய மிக பெரிய ரசிகை".

"எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு பெண் குழந்தை இல்லை என்ற வருத்தம் இருந்தது . லீலாவதி பிறந்ததிற்கு பின் பெண் குழந்தை இல்லை என்ற வருத்தம் சுத்தமாக குறைந்துவிட்டது" என்று தனுஷ் கூறியுள்ளார்.