மலையாள சினிமாவில் டாப் 3!! திலீப் கட்டியெழுப்பிய சாம்ராஜியத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?
நடிகை வழக்கின் தீர்ப்பு
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தற்போது அதிரடி தீர்ப்பு வழங்கியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகையை கேரளாவில் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் 2017 பிப்ரவரி இரவு நாட்டையே உலுக்கியது.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவுபெற, இன்று திலீப் உள்ளிட்ட 10 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் வெளியிட்டது. இந்த வழக்கின் தீர்ப்புக்காக கேரளாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் செய்த 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
6 பேரும் நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதேநேரம் திலீப்பிற்கு குற்றத்தில் பங்கில்லை என்றும் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறபட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நடிகை தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் டாப் 3
இந்நிலையில், குறுகிய காலத்தில் கிடைத்த பல வெற்றிகளால், மலையாள சினிமாவில் மோகன்லால், மம்மூட்டிக்கு பின் நம்பர் 3 திலீப் எனும் நிலையை உருவாக்கியது. ஒருக்கட்டத்தில் அதிகார மையமாக உருவெடுத்தார் திலீப். அதற்கு பல காரணங்களில் முதலாக இருந்தது அம்மா சங்கம். 2010ல் மலையாள நடிகர் சங்கமான அம்மா கடுமையான பண நெருக்கடியில் தவித்தபோது அதன் சரிசெய்ய எந்த நடிகர்களும் வராத நிலையில் திலீப் தான் முன்வந்து புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார்.
சங்கத்திற்காக தானே முன் வந்து ஒரு படத்தினை தயாரிப்பதாகவும், மம்மூட்டி, மோகன்லால் என மூத்த நடிகர்கள் முதல் இளையவர்கள் வரை அப்படத்தில் நடித்து வந்த லாபத்தை சங்கத்திற்கே கொடுத்து நெருங்கடியை தீர்த்தார் திலீப்.

அதேபோல் தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே லாபப்பங்கீடு தொடர்பாக நடந்த பிரச்சனையை உள்ளே நுழைந்து சரிசெய்தார் திலீப். நடிகராக மட்டுமில்லாமல் பிசினஸிலும் மம்மூட்டி, மோகன்லாலுக்கு இல்லாத அளவிற்கு இருந்தது.
துபாய் வரை பரவியுள்ள பிரபலமான தே புட்டு ரெஸ்ட்ராண்ட் தொடங்கி ரியல் எஸ்டேட், ஹவுஸ்போட் வரை திலீப் பிசினஸ் செய்து வருகிறார். 2017ல் அவர் கைதாகும் போதே அவருக்கு இருந்த சொத்து மதிப்பு ரூ. 300 கோடிக்கும் மேல். டி சினிமாஸ் பிசினஸ், முக்கிய நகரங்களில் சொந்த திரையங்குகளையும் நடத்தி வருகிறார்.
இதன்மூலம் தான் தியேட்டர் ஓனர்கள் மற்றும் தயாரிபபாளர்கல் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறார் திலீப். 2025ன் படி திலீப்பின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 600 கோடிக்கும் மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.